Skip to main content
யாவும் ஒன்றினுள்... - யான் காப்லின்ஸ்கி
 |
| Artist: Serge de Vries |
யாவும் ஒன்றினுள்
ஒன்று யாவற்றிலும்
உடலுக்குள் மனம்
மனதுக்குள் உடல்
சாதாரணத்தில் விசித்திரம்
விசித்திரத்தில் சாதாரணம்
ஒரு கைவிடப்பட்ட
பண்ணை வீட்டின்
பரண்மேல் உள்ள
பழைய பெட்டிக்குள்
தேனீக்கூட்டம்...
அணு அணுவாக ஒன்றுக்குள் ஒன்றாக.
ReplyDeleteஅற்புதம்!!
நன்றி! 😊
Delete