எங்கு சுவாசம் இருக்கிறதோ - ஆடம் ஜகாயெவ்ஸ்கி

 

Artist: Carole Pueo

அவள் மேடையில் தனியாக நிற்கிறாள்

அவளிடம் எந்தவொரு இசைக்கருவியும் இல்லை.


​அவள் தன் உள்ளங்கைகளை மார்பின் மீது வைக்கிறாள்,

எங்கு சுவாசம் பிறக்கிறதோ

பிறகு எங்கு அது முடிகிறதோ அங்கே.


​உள்ளங்கைகள் பாடுவதில்லை

மார்பும் பாடுவதில்லை.


​எது பாடுகிறதோ

அது மௌனமாகவே இருக்கிறது.

*

Comments

  1. அற்புதம். எந்த ஒரு இசை கருவியும் தேவை இல்லை தான்.

    உங்களின் 'ஒரு ஜூன் காலைப்பொழுது' கவிதையின் வரிகள் ஞாபகம் வந்தது.


    வெளிச்சம் இங்கே வருவதற்குள்

    உன் கைகளைப் பிடித்துக்கொண்டபடி

    மெளனித்திருக்க விரும்புகிறேன்.

    ReplyDelete
  2. ஒரு கரோக்கி இசைக் கோர்வையை mute செய்து பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது கவிதை.

    ReplyDelete

Post a Comment