 |
Artist: Felix Vallotton |
புற்கள் ஒளியில் சலசலக்கின்றன
நாரைகளும் கொக்குகளும்
பசும்செறிவினின்று சிதறிப்பறக்கின்றன
நான்
இம்மாலைப்பொழுதின்
பச்சைப் பசேலென்ற
அமைதிக்கு நடுவே
கொஞ்சநேரம் கழித்து என
பத்திரப்படுத்திவைத்திருந்த
இனிப்பு மிட்டாய்களிடையே
திடுமென உன்னை
என் சட்டைப்பையில் தேடிப்பார்க்கின்றேன்.
*
நினைவென்னும் இனிப்பு மிட்டாய், அழகிய சொல்லாடல். உங்களின் சொல்வீச்சு அபாரம். நல்ல கவிதை.
ReplyDeleteஆ! மிக்க நன்றி! 🙏
Delete