நாளை - டேவிட் பட்பில்

 

Artist: Marc Chagall

நாளை நாம்

எலும்பும் சாம்பலுமாக மாறிவிடுவோம்,

களைச்செடிகளின் வேர்கள்

நமது மண்டையோட்டைத்

துளைத்து வெளிவரும்.

இன்றோ,

காலி மனதோடு,

சாதாரணமான உடையில்,

நிறைந்த வயிற்றுடன்,

உயிரோடும் உணர்வோடும்

இவ்விடத்தில்

இப்பொழுது இருக்கிறோம்.

இசையில் மயங்கிக் கிடக்கிறோம்,

இனி மது எதற்கு?

வா, அன்பே,

கால்கள் இருக்கும் போதே

ஆடித் தீர்ப்போம்.


*

டேவிட் பட்பில் (1940–2016)

அமெரிக்கக் கவிஞர். நாடக ஆசிரியர்.  While We've Still Got Feet, Happy Life என எட்டுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

Comments