காத்திருத்தல்

Artist: Rene Magritte


உனக்காகக் காத்திருக்கிறேன்,

இம்முறை கதவுக்கு மிகப் பக்கத்தில் 

வந்து நின்று,

கைப்பிடியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த மரக்கதவைத் திறந்துதான்

நீ என்னிடம் வரமுடியுமா

இது என்ன அநீதி என எண்ணச்செய்யும் அளவுக்கு

என்னை விளிம்பிலும் விளிம்பிற்குத் தள்ளிவிட்டது

இம்மாலைப்பொழுது.

என்னைத் திறந்து

நீ உள்ளே

வர வாய்ப்பேயில்லையா?

காத்திருக்கிறேன்,

பூச்சிகளின் ரீங்காரங்களைக் கேட்டபடி.

*

Comments