புள்ளிக்கு ஒரு பாடல்

Artist: Joan Miro


நீ தான் ஊற்று, நீக்கமற்ற உளல், அன்னை அதாவது சாரம்,

எங்கும் உன் மாறுவேடங்கள்,

நீ ஒரு விழி, அப்புறம் செவி ஏன் வாயும் நாசியும் கூட.

உன் வழியாக யார் யாரெல்லாம் பார்க்கிறார்கள்? 

யாருக்குச் செய்தி அனுப்புகிறார்கள் உன் உளவுப்படையினர்?

எனக்கது தெரியவில்லை

ஆனால் உன் வழியேதான் மரித்தவர்கள்

கேட்கிறார்கள் என்பதை அறிவேன்.

தாவரங்களால் கண்காணிக்கப்படும்

அறையில் அமர்ந்திருக்கிறேன் இப்போது.

என் நோட்டின் வெண்வெளியில்

நீ அமைந்திருக்கிறாய் சுழன்றிறங்கும் படிக்கட்டுகளுடைய

தெள்ளிய கிணறு போல.

உன் வழி ஒரு பாதை நீள்கிறதா புள்ளியே?

ஒவ்வொரு தூசியும்

ஒவ்வொரு அண்டமும் என

கொஞ்சகாலத்தில் நாங்கள்

உன்னில் ஒடுங்குவோம்.

எங்களிடம் கருணையோடு இரு.

*

Comments