பனிப்புயல் - ஆடம் ஜகாயெவ்ஸ்கி

Artist: Guy Wiggins


நாங்கள் இசை கேட்டுக்கொண்டிருந்தோம்—

கொஞ்சம் பாஹ், கொஞ்சம் சோகமான ஷூபர்ட்.

பிறகு சிறிதுநேரத்திற்கு மெளனத்தைச் செவியுற்றோம்.

வெளியே பனிப்புயல் கர்ஜித்தது,

குளிர்காற்றோ அதன் நீல முகத்தைச்

சுவரோடு அழுத்திவைத்துக்கொண்டது.

மரித்தவர்கள் சறுக்குகளில் சவாரிசெய்தபடியே,

எங்கள் சாளரங்களை நோக்கி

பனி உருண்டைகளை எறிந்தனர்.

*


Comments