ஆகாயவதி



விடிந்தும் விடியாத பொழுது.

யதேச்சையாக எனது அறையில் விவிலியத்தை திறந்தேன்,

சில்லென்றக் காற்று,

அது உன்னதப்பாட்டு.


அந்தக் காதலன் எவ்வளவு

அழகாகச் சொல்லிவிட்டான்:

"முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம்

எப்படியிருக்கிறதோ, அப்படியே

குமாரத்திகளுக்குள்ளே எனக்குப்

பிரியமானவளும் இருக்கிறாள்."


இதோ இங்குதான் இருக்கிறாய் என்பதுபோல

உன்னைப் பற்றி ஏதேனும் கூற முடியுமா? 


நீயோ ஆகாயவதி

உனது முகவரிகள் எண்ண முடியாதவையாக உள்ளன

இப்போது இவ்வறையில் கூட

எட்டாயிரம் திசைகளில் இருக்கிறாய்

சன்னலுக்கு அப்பாலான தொலைவையும்

விட்டுவைக்கவில்லை


ஒரேயொரு உருவமாக நான் நீடிப்பதை எண்ணி

என்னைக் கவலையுறச்செய்யும்

உன்னைப் போற்றித் துதிப்பது தவிர

இவ்வதிகாலையில்

வேறு என்னதான் செய்யமுடியும்

*

Comments

  1. அழகான கவிதை

    ReplyDelete
  2. தங்களது உன்னத கவிதையில் எட்டாயிரம் திசைகளில் இருப்பவள் தென்றலா? அவள் தான் அந்த ஆகாயவதியா? ப்ரியமானவளா?

    ReplyDelete
  3. உன்னத கவிதை

    ReplyDelete
  4. சன்னலுக்கு‌ அப்பாலான தொலைவையும் விட்டுவைக்கவில்லை🤗

    ReplyDelete

Post a Comment