விபத்திலிருந்து நூலிழையில் தப்பியவனின் தனிமொழி

Artist: K S Radhakrishnan


செய்தித்தாளில்தான் வாசித்திருக்கவேண்டும்

ஒரு தனித்த பின்னிரவில்

தன் தூசிபடிந்த

வலிமையை ஒன்றுதிரட்டி

முதியவரொருவர்

டிபன் பாக்ஸை திறக்க முயற்சித்திருக்கிறார்

ஓரிரு நொடிகளில் நெஞ்சைப் பிடித்தவாறு

தரையில்

சரிகிறார்

மங்கலான புகைப்படத்தில்

அறியமுடியாத

ஏதோவொன்றின்

வண்டிச்சக்கரமோ என்பது போல

அவ் வட்ட டிபன் பாக்ஸ் காட்சியளித்த

அந்தக் காலைப்பொழுது

எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது

அன்பே நீ பெரிய கலைஞன்தான்

என்ன எளிமை

என்ன பயங்கரம்...

*

Comments