ஒருமை
![]() |
| Artist: Casper David Friedrich |
தொலைவின் உடை உடுத்திய
ஒரு குளிர்ந்த மாலைப்பொழுது,
நான் உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன்
வெகுநேரமாய்.
நீண்ட நடையில் வலசைப் பறவைகளின் பாதையோரத்தில்
பார்த்தேவிட்டேன்: ஒரு நட்சத்திரம்,
என் கழுத்தின் மீது உன் பற்கள்
நிலவியபோது இருந்த மினுக்கம்.
கொஞ்ச நேரத்திற்கு
நடனமிட்டது என் இதயம், நீதான் நீதான் என ஆட்காட்டிவிரலை
நீட்டிக்கொண்டிருக்கும்
பசிய மரத்தின் கிளையைப் போல.
பிற்பாடு அதுவும் அடங்கிவிட்டது
இந்த அந்தி மூட்டத்தினுள்.
இப்போது என் பெயர் சாயங்காலம்.
*

Comments
Post a Comment