சோர்வுற்ற மனிதன் - அட்டிலா யோஸெஃப்

Artist: William Hays


வயல்வெளியிலிருந்து 

பொலிவிழந்த உழவர்கள்

அமைதியாக வீடு திரும்பத்தொடங்குகின்றனர்.

நாங்கள் அருகருகே படுத்திருக்கிறோம், நதியும் நானும்.

வாடிய புற்கள் உறங்குகின்றன என் இதயத்தின் கீழே.

நதி சப்தமின்றி இருக்கிறது, பேரமைதியைக் கொண்டுவருகிறது,

என் கவலைகள் யாவும் நீராவியாய் கரைகின்றன.

நான் இனி ஹங்கேரியனோ மனிதனோ

குழந்தையோ எவருடைய சகோதரனோ கூட அல்ல—

களைப்பில் இங்குக் கிடப்பவன் மட்டுமே.

இரவு தன் மெளனத்தைத் தருகிறது,

நான் அதனுடைய வெதுவெதுப்பான ரொட்டியின் ஒரு துண்டு.

விண்ணகம் இப்போது உறங்குகிறது,

விண்மீன்கள் இளைப்பாறுகின்றன

என் நெற்றியிலும்

அமைதியான நதியின் மீதும்.

*

அட்டிலா யோஸெஃப் (Attila Jozsef) (1905-1937)

ஹங்கேரியின் முன்னோடி கவிஞர்களில் ஒருவர். மார்க்சியச் கண்ணோட்டமும் அழகிற்கான தேட்டமும் இயைந்த கவிதைகள் இவருடையவை.  


Comments