ஒரு ஜூன் காலைப்பொழுது

Artist: Nagoya Takashi


நேற்றிரவு முழுக்கப் பெய்த மழையில்

தொட்டிச்செடிகளினின்றும்

மரங்களினின்றும்

நிறைய உதிர்ந்துவிட்டன.

கதவைத் திறந்ததும்

இதே கைகளால் வேறெங்கேயோ

நான் திறக்கக்கூடாத

ஏதோவொன்றைத் திறந்துவிட்டதாக 

உணர்ந்தேன்,

மூட்டம் இன்னமும் தெளியவில்லை,

குளிர்காற்று தன் வாளைச் சுழற்றுகிறது.

வெளிச்சம் இங்கே வருவதற்குள்

உன் கைகளைப் பிடித்துக்கொண்டபடி

மெளனித்திருக்க விரும்புகிறேன்.

*

Comments

  1. மெளனம் பேசும் மொழிகள்...

    அற்புதம்

    ReplyDelete

Post a Comment