தலைப்பிடப்படாதது -ரொபர்டோ ஹ்வாராஸ்

Artist: Carl Jung


மனிதன்,

இரவின் கைப்பாவை,

வெற்றிடங்களைக் குத்துகிறான்.


ஆனால் ஒருநாள்

வெற்றிடங்களில் ஒன்று சீற்றத்துடன்

அவனைத் திருப்பிக் குத்துகிறது


அதன்பிறகு அங்கே ஒன்றுமேயில்லை

வெற்றிடத்திலிருக்கும் ஒரு குறுங்கத்தியைத் தவிர.

*


ரொபர்டோ ஹ்வாராஸ் (1925-1995)

அர்ஜென்டினா கவிஞர். தனது வாழ்நாள் முழுதும் "செங்குத்து கவிதை" (Vertical Poetry) என்ற ஒற்றைத் தலைப்பின் கீழேயே தொடர்ச்சியாக பதினான்கு கவிதைத் தொகுதிகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டிருக்கிறார். காலம் செயல்படும் கதைசொல்லல் முறையையோ தனிப்பட்ட உணர்வுகளையோ தவிர்த்து, சொல்வழி தியானத்தையொத்த தொனியில் வாழ்வின் ஆழத்தை நோக்கி செங்குத்தாக இறங்குபவை இவரது கவிதைகள். அமெரிக்க கவிஞர் டபிள்யூ.எஸ். மெர்வின் மொழியாக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுதி வெளிவந்துள்ளது. 

Comments