சொல்லப்படாதவை ​- டேனா ஜோயா

Artist: Vilhelm Hammershoi


​நாம் வாழ்வதன் பெரும்பகுதி நமக்குள்ளேயேதான் நிகழ்கிறது–

துக்கங்களின் நாட்குறிப்புகளும்,

அங்கீகரிக்கப்படாத காதலின் ஊமை வலிகளும் 

வெளியே சொல்லப்படாமல் போனதாலேயே

உண்மையற்றவை ஆகிவிடுவதில்லை.

நாம் அந்தரங்கமாகப் பகிரத்துணிவதைக் காட்டிலும்

மறைத்து வைத்திருப்பதே எப்போதும் அதிகம்.

இறந்தவர்களுக்கு

நாம் எழுதும் கடிதங்களை எண்ணிப்பாருங்கள்

*


டேனா ஜோயா (1950- )

அமெரிக்க கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். Daily Horoscope, The Gods of Winter, Interrogations at Noon, Pity the Beautiful என நான்குக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளும் Can Poetry Matter? என்ற தலைப்பில் விமர்சன கட்டுரை தொகுதியும் வெளிவந்துள்ளன. இத்தாலிய கவிஞர் யூஜினியோ மான்ட்டேலின் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். 

Comments