தருணங்களின் புத்தகம்

Artist: Billy Solitario


1

 

நான் வாழாத வாழ்க்கைகளுக்குள்ளிருந்து வந்த கடிதம் போல

அதிகாலை நிலவு.

பட்டப்பகலிலும்

தன்னை மறந்து

ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

நான் என் ஆசிரியர்களில் ஒருவரை கண்டடைந்துவிட்டேன்


2

காற்றிலிருந்து ஒரு சிட்டுக்குருவி 

வந்தது

பிறகு

போய்விட்டது


3

மண்ணை கையில் எடுக்கிறேன்

அது சுவாசிக்கிறது,

லொக்கு லொக்கு என இருமுகிறது.


4

அந்தி வானம்—

தன் நாவால்

காயங்களை

ஒரு புலி போல நக்கிக்கொண்டிருக்கிறது.

நான் நீண்ட வரிசையில் நிற்கிறேன்

முன்னே கொசுக்களும்

மண்புழுக்களும்

நாரைகளும்


5

அப்படியொரு அசுரத்தனமான காற்று...

இந்த இடத்தில் முன்பு நடந்த ஒவ்வொன்றும்

இதே இடத்தில்

இன்னும் இருப்பது

சிறிது சிறிதாக

தெரிய ஆரம்பித்துவிடும் போல.


6

இரவு 07.23,  ஒரு மின்னல் கீற்று

ஆஹா, ஆஹா, நீ என்னை இன்னும் மறக்கவில்லை போலவே. 

*

Comments