எனக்கு ஒருவரைத் தெரியும் - மேரி ஆலிவர்

Artist: Georgia O’Keeffe


ஒரு மலர் விரிவதைப் போலவே

ஆனால் அதனினும் வேகமாக முத்தமிடும்

ஒருவரை எனக்குத் தெரியும்.

மலர்கள் மதுரமானவை.

குறுகியதும் பேரானந்தமுமான

வாழ்வை உடையவை.

மிகுந்த இன்பத்தைத் தருகின்றவை.

இவ்வுலகில்

அவற்றுக்கு எதிராகச்

சொல்வதற்கென்று

எதுவுமில்லை.

அவற்றால் முத்தமிட முடிவதெல்லாம்

காற்றை மட்டுமே என்பது

சோகம்தான் இல்லையா?

​ஆம், ஆம்! நாமே அதிர்ஷ்டசாலிகள்..

*

Comments

  1. குறுகியதும் பேரானந்தமுமான வாழ்வை உடையவை

    ReplyDelete

Post a Comment