காதல் கவிதை - டக்லஸ் டன்

Artist: Gurbuz Dogan Eksioglu


நான் உனக்குள் வாழ்கிறேன், நீ எனக்குள் வாழ்கிறாய்;

நாம் இருவரும் ஒருவரை ஒருவர்

ஆட்கொண்ட இரண்டு தோட்டங்கள்.

சில நேரங்களில் உன்னை அங்கு

கண்டடைய முடிவதில்லை என்னால்,

சற்றுமுன் நீ எழுந்து சென்ற

ஊஞ்சல் மட்டும் அங்கே கிறீச்சிட்டுக் கொண்டிருக்கிறது,

அல்லது உனக்குப் பிடித்த புத்தகம்

நிழற்கடிகாரத்துக்கு அருகே கிடக்கிறது.

*

டக்ளஸ் டன்  (1942- )

ஸ்காட்டிஷ் கவிஞர், பேராசிரியர், விமர்சகர். Terry Street, Elegies, Love or Nothing, The Noise of a Fly என ஐந்திற்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. The Faber Book of Twentieth-Century Scottish Poetry-யின் தொகுப்பாசிரியர். 

Comments

  1. சில நேரங்களில் உன்னை அங்கு
    கண்டடைய முடிவதில்லை என்னால்

    சில நேரங்களில் சிலரை தொலைத்து தான் விடுகிறோம்.

    அற்புதம்..

    ReplyDelete
    Replies
    1. அதே அதே. நாம் தொலைத்துவிட்ட விஷயங்களின் அடர்ந்த தோட்டம் என ஒன்று உள்ளது.

      நன்றி! நன்றி!

      Delete

Post a Comment