மறுபடியும் ஒரு மாலைநடையில்
என் விழிகள் எதைப் பார்த்தாலும் பின்புறம்
ஒரு மதில் சுவரையும்
பார்க்கிறது.
ஆளை விழுங்கும் நிலக்காட்சியின் வாயிலில்
சிலைத்து நிற்கிறேன், அங்குள்ளது ஒரு பிரம்மாண்டமான சுவர்.
உன் வெம்மையான பின்னங்கழுத்து நினைவுக்குப் பின்னும்
சீனப்பெருஞ்சுவர் எழுந்துவிடுமோ?
சட்டென உயரத்தில் பழுத்த மாங்கனியைச்
சுவையூறக் காண்கிறேன் அதன்பின்னும்
குயில் பாட்டின் வண்ணம் அடித்த மதில் சுவர்.
இனம் புரியாத வாசனைகளுக்கும்
நீரின் சலசலப்புக்கும் பின்னுள்ள
பாசிபடிந்துயர்ந்த சுவரை
நான் காண்பது என் வாழ்விலே
இதுதான் முதல்முறை.
என்ன உள்ளது
எல்லாவற்றுக்கும் மறுபக்கத்திலும்?
அங்கெல்லாம் அங்கெல்லாம்
நான் உலவிக்கொண்டிருக்கின்றேனோ
ஒரு புத்தம்புதிய பெயரில்?
இருக்கட்டுமே, இருக்கட்டுமே

Comments
Post a Comment