நுழைவாயில் - ரெய்னர் மரியா ரில்கே

Artist: Isabel Quintanilla


​நீ யாராகவும் இரு: மாலைநேரத்தில்,

எல்லாம் பரிச்சயமான உனது அறையினின்று வெளியில் வா;

எல்லையற்றப் பெருவெளிக்கு முந்தைய

கடைசி இல்லம் உன்னுடையது;

நீ யாராகவும் இரு.

காலத்தில் தேய்ந்துபோன வாசற்படியைக் கடந்து

வெளியே பார்ப்பதற்குச் சிரமப்படும்

களைத்த உனது விழிகளால்,

மெதுமெதுவாக, ஒரு கரிய மரத்தை உயர்த்தி,

விசும்பினது பின்னணியில்,

மெலிந்ததாகவும் தனித்ததாகவும் நிறுத்து:

​இப்போது நீ ஓர் உலகத்தைப் படைத்துவிட்டாய்.

அதுவோ பிரம்மாண்டமானது —

மௌனத்தில் பழுக்கும் ஒரு சொல்லைப் போல.

உனது சித்தம் அதன் அர்த்தத்தைப் பற்றிக்கொள்ளும் சமயத்தில்,

உன் கண்கள் கனிவோடு அதை மெல்ல விட்டுவிடுகின்றன...

*

Comments