வழிகள்
![]() |
| Artist: Gordon Mortensen |
உன் பெயர், உனக்கு முன்னமே, என்னிடம்
வந்துவிட்டது, நதியை விட
வேகமாகப் பாய்ந்துவரும் மண்வாசனை போல.
அப்புறம் உன் குரல்,
சாளரங்களும், படகுகளுமாக.
நான்
நூறுநூறு மின்மினிகளாக
வலைவீசி மிதந்தொரு அந்தியில்
உன் உடல் என்னை நோக்கி வந்தது, வயல்வெளியின் பச்சை பசேல் என.
அதன் பிறகும் கூட நீ வந்தாய் எனச்
சொல்ல முடியாது
கொஞ்சமாக நீ வந்தாய்
கொஞ்சம் வரவில்லை
அவ்வளவு பக்கத்திலிருக்கிறாய் எனினும்
நீ இன்னும் வந்துகொண்டிருக்கிறாய்
என்னிடம் பேசுவது என்னவோ
அடைய முடியாமையின் மொழியில்தான்,
கேட்பதற்கும் அவ்வளவு
இனிமையாக வேறு உள்ளது,
இனிமையாக...
*

இந்தக் கவிதை என்னோடு பேசுகிறது. இது என்னுடையது எனக்கானது என்று எண்ணுமாறு இருக்கிறது
ReplyDeleteநன்றி! நன்றி!
Delete