மேப்பிள் மரங்கள் - மேரி ஹவ்

Artist: Erik Van Ommen


​வீட்டுக்குப் பின்பக்கம் நின்றிருந்த அந்த மேப்பிள் மரங்களிடம் கேட்டேன்,

நான் என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்? என்று.

அவை "ஷ்ஷ்ஷ் ஷ்ஷ்ஷ் ஷ்ஷ்ஷ்...." என்றன.

மீண்டும் கேட்டேன், "நான் எப்படி வாழ வேண்டும்?"

இலைகள் அலையலையாக அசைந்து மின்னின.

பறவையொன்று கிளையிலிருந்து கூவியது, தன் சொந்த மொழியில்.

முற்றத்திற்கு அப்பால், இன்னொரு கிளையிலிருந்து மற்றொரு பறவை

அதற்குப் பதிலளித்தது.

அணிலொன்று அடிமரத்தினின்று விறுவிறுவென மேலே ஏறி

கிளை எங்கும் ஓடியது.

அப்படியே அசையாமல் நில் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்,

எவ்வளவு நேரம் உன்னால் அப்படி இருக்க முடிகிறது என்று பார்.

அசையாமலிருக்க முயற்சி செய், கொஞ்சநேரமேனும்,

ஒளியை அருந்தியபடி, சுவாசித்தவாறு.

*

மேரி ஹவ் (1950 - )

அமெரிக்க கவிஞர். What the Living Do, The Kingdom of Ordinary Time, Magdalene என கவிதைத் தொகுதிகள் வந்துள்ளன. 

Comments