ஒரு கோடை மாலைப்பொழுது



உலகத்தின் அடைப்புக்குறிக்குள்

நாலைந்து வார்த்தைகளைச் சொல்ல

வந்தவன்தானா

நான்?

இந்த மாலைவெளிச்சத்தில்

தொலைவில் உள்ள ஒவ்வொன்றுமே

புலன்களுக்கு

அவ்வ்வ்வளவு அருகில் வந்துவிட்டது—

பார்வை போர்த்திய மலைகள், ஊளையிடும் அதலங்கள்,

கருமுகில்கள், நீ...

தொடுவதற்கெனக் கையை நீட்டுகிறேன்,

காற்றின் கன்னங்களும் உன்னுடையதும்

ஒன்றுபோலவே இருக்கின்றனவே எப்படி?

*

Comments