அந்தியைப் பார் - யி லூ
![]() |
| Artist: Jim Holland |
எவ்வளவு பெரியதாக, எவ்வளவு
செக்கச்சிவப்பாக உள்ளது
அந்த அஸ்தமனச் சூரியன்
கட்டடத்தால் மறைக்கப்பட்டு,
வெறும் விளிம்பு மட்டுமே தெரிகிறது
நான் படிப்பறை ஜன்னலை நோக்கி ஓடுகிறேன்
அதன் இடது பாதியைப் பார்க்க
பிறகு சமையலறை ஜன்னலுக்கு விரைகிறேன்
அதன் வலது பாதியைப் பார்க்க
அப்புறம் அறைக்குள் அங்கும் இங்குமாக
ஓடுகிறேன்
அந்திச் சூரியனும் என்னைப் பார்க்க
ஆசைப்படுகிறதோ என்று நினைத்தபடி.
*
யி லூ (Yi Lu)
சீன கவிஞர். நாடக மேடை வடிவமைப்பாளர், See, Using Two Seas, Forever Lingering, Sea Summit என ஐந்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

Comments
Post a Comment