தீவொன்றில் - ஆடம் ஜகாயெவ்ஸ்கி

Artist: Andrew Wyeth


இந்தத் தீவில் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு

நெடுங்காலமாகிவிட்டது

ஆனால் அவற்றின் தடங்கள் இன்னும்

அப்படியே உள்ளன.

சிறிய புகைவண்டி நிலையம்

இன்னும் நிற்கிறது,

இரு நடைமேடைகள்

பல்லாண்டுகளாக ஒருவரையொருவர்

பார்த்தவாறிருக்கின்றன— ஆனால் ஒருபோதும்

சந்தித்துக்கொண்டதில்லை.

பென்னம் பெரிய முழு நிலவு

மேகத்தினின்று வெளிவந்து, உன்னிப்பாக

உற்றுக் கவனிக்கிறது, யாவற்றையும்

புரிந்துகொள்ளும் ஒருவரைப் போல.

தண்டவாளங்கள் அகற்றப்பட்டு

நெடுங்காலமாகிவிட்டது

ஆனால் பாதை இன்னும் உள்ளது.

பாதைகளை அழிக்க ஏலாது,

அவை பியோனி மலர்களால்

மூடப்பட்டிருந்தாலும் 

வாசனை வீசும், நித்தியத்தைப் போல.

*

Comments