வர்க்கலா கடற்கரை, 20/04/2025

 

Artist: Harald Sohlberg


என் விரல்களுக்கிடையிலிருந்து

மறைந்துகொண்டிருக்கின்றன

அந்தியின் விரல்கள்


இன்னும் சற்று நேரம்தான்

இன்னும் சற்று…

இன்னும்…


கதகதப்பு மறைந்துவிடும்

ஏக்கச்சொரூபமான என் கையும் மறைந்துவிடும்

நானுமே கூட மறைந்துவிடுவேன்

நிலவொளிக்கு இடைஞ்சலாக இருப்பதற்கு

எனக்கு என்ன உரிமையுள்ளது?

*

நன்றி: யாவரும் இணைய இதழ்

Comments