நான் உன் பிரார்த்தனை இயந்திரம் அன்றோ?
![]() |
Artist: Artur Grottger |
இந்நேரம் யார் யாரெல்லாம்
பாதைகளைப் பறிகொடுத்திருக்கிறார்களோ
அவர்கள் ஒவ்வொருவரும் மண்துகள்களுக்கிடையே கபாடங்களைக் காணட்டும்
இந்நேரம் யார் யாரெல்லாம் ஏங்கித்தவித்துக் கண்ணீர் சிந்துகிறார்களோ
அவர்களுக்கு நினைவின் அம்புப்படுக்கைகள்
யாவும் மலர் மஞ்சம் ஆகட்டும்
இந்நேரம் யார் யாரெல்லாம் வலியில்
தன்னந்தனியே உறைந்துள்ளார்களோ
அவர்கள் ஒவ்வொருவரின் வேதனையும் எனக்கு உரிமையுடையதாகட்டும்
இந்நேரம் யார் யாரெல்லாம்
ஓர் உபயோகமற்ற பழையப் பொருளைப் போல கைவிடப்பட்டுள்ளார்களோ
அவர்களுக்கு நான் இருக்கிறேன் என்றாகட்டும்
இந்நேரம் யார் யாரெல்லாம்
சில்லுச்சில்லாக உடைந்துகிடக்கிறார்களோ
அவர்கள் ஒவ்வொருவரின் காயங்களும் என்னில் கூடடையட்டும்.
*
அழகான கவிதை ❣️.if I can stop a heart from breaking...என்கிற எமிலி டிக்கின்சனின் கவிதையை நினைவூட்டுகிறது .
ReplyDeleteஆ! நன்றி! ❤️
Deleteஅவர்கள் சார்பில் நன்றி
ReplyDelete