முதிர்ச்சியடைதல் - லிண்டா கிரெக்
Artist: Louise Bourgeois |
நான் லீ போவை வாசித்துக்கொண்டிருந்தேன்.
தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது, ஒலியில்லாமல்.
இந்தத் திரைப்படத்தையும் முன்பே பார்த்திருக்கிறேன்.
திரையில் அந்த மனிதன்
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று சொல்லும்போது
ஒரு கணம் ஒலியை அதிகரிக்கிறேன்.
பின்னர் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு,
வாசிப்பைத் தொடர்கிறேன்.
**
Comments
Post a Comment