பைத்தியக்காரத்தனமான சாயங்கால மழையில்
உடல் நடுங்குமளவுக்கு நனைந்த
குட்டிப் பூனையொன்று
தன் எலும்பும் தோலுமான சரீரத்தால்
எங்கோ ஒரு சொரசொரப்பான சுவரில்
தேய்த்து
உராய்ந்து
மிரட்சியுடன்
வரையும் ஓவியமா?
*
Comments
Post a Comment