பிரார்த்தனை
புத்தம்புதியதாகக் காணும்போதுகூட
ஏன் கடைசிமுறை பார்ப்பது போல
உணரச்செய்கிறாய் ?
இறுதி வார்த்தையின் தூரம் எமக்கு வேண்டாம்
முதல் வார்த்தையின் வசந்தமும் வேண்டாம்
உன் பூமியின் ஒவ்வொன்றையும் உணரச்செய்
ஆனால் என்ன உணர்கிறேன் என்பதை
மாத்திரம் இந்நாட்களில் அறியவிடாதே
எனக்கு அனுமதியளி
உண்மையான ஜூலைக்காற்றினூடே
சிறிதுதூரம் போய்வருகிறேனே
முடிவிலாத வடிவங்களில்
உனைத் தெள்ளத்தெளிவாகப் பார்த்தபடி.
*
Comments
Post a Comment