துரோஹோபிக் நகரில் - ஆடம் ஜகாயெவ்ஸ்கி
ஆனால் சில சிறுநகரங்களில்
நிழல்கள்
பொருட்களை விடவும்
நிஜமானவையாக இருக்கின்றன
சாயங்காலவேளையும் அங்கு வந்து சேர்கிறது
பழைய வீடுகள்
மெளனமாகக் காத்திருக்கின்றன
அடுத்ததாக இருள் வருகிறது
பாருங்கள்
எவ்வளவு மென்மையாக.
*
துரோஹோபிக் (Drohobycz) - உக்ரைனில் உள்ள நகரம். 1941ஆம் ஆண்டிலிருந்து சில காலங்களுக்கு இங்கு ஹிட்லரின் வதை முகாம், முழு செயல்பாட்டில் இருந்திருக்கிறது.
Comments
Post a Comment