இதவேனிற்காலம்



வெயில் வந்துவிட்டது

என்னை எளிமையாக்குவதற்கென

நீ வந்துவிட்டாய்

உன்னைப் பார்க்கையில் சாக்லேட்டை

நினைத்துக்கொள்ளும் நானும் வந்துவிட்டேன்.


மரங்களில் ஏன் நீர்நிலைகளில் கூட

அத்தனை சாளரங்களும் திறந்திருக்கின்றன

இனி முகவரியைத் தொலைத்த காற்றின் ஏகாந்தமும்

வெண்ணிற பறவைகளும் மாத்திரமே.


புத்தக அடுக்குகளிலோ தூசி

சரி இருக்கட்டுமே

ஒருநாள் என் கரங்களால் ஒரு புத்தகத்தை

எடுத்து மெ...துவாக வருடுவேன்

உன் முகத்தை நினைத்தபடி.


அப்போது சாயங்காலத்திற்கும் உள்ளங்கைக்கும்

வித்தியாசம் இருக்காது

ஆ! இந்த இதவேனிற்கால நாட்கள்...

*

Comments

  1. அற்புதம். கவிதை உள்ளங்கையில் ஏந்திய பனிக்கட்டி போல இருக்கிறது

    ReplyDelete

Post a Comment