மறுபடியும் ஒரு மாலைப்பொழுது
Artist : Felix Vallotton |
இது மெஹந்தி கைகளின் தொடுகை என நெஞ்சையழிக்கும் ஒரு சாயங்காலம்
கறுப்புப் பூனை அங்கிருந்து, வெள்ளைப்பூனை இங்கிருந்து,
பெட்டி கைமாற்றப்பட்டுவிட்டது.
நின்று நிதானித்துப் புற்களில் அலைகள் எழுந்தடங்கியதைச் செவியுற்றேன்
திடுமென ஒருகணம் எனக்கு விழியினில் எதிர்பட்ட
ஒவ்வொன்றையும் நம்பவேண்டும் போலிருந்தது
மறுகணம் தெய்வங்களை ஏறிட்டு
ஏதொன்றாலும் எனை கைவிட இயலாது என
சவால்விடவேண்டுமென்றிருந்தது
நல்வரவு, நல்வரவு
எவ்வ்வ்வளவு நாட்களாயிற்று அன்பே
அதோ பார் பாரபட்சமில்லாத நிலவு
பாதை நெடிது, தொலைவோ இனிது
வா, நடப்போம்
நாம் முடிவின்மையின் பிரஜைகள்
*
Comments
Post a Comment