வகுப்பு முடிந்ததும்
ஏதோவொரு தைரியத்தில்
உன் பிங்க் நிற செருப்புகளை மாட்டிக்கொண்டு,
நண்பகல் நேர நகரத்தில்,
திடீரென எவர் விழிகளுக்கும் புலப்படாமலான
ஒரு மனிதன் என
நடக்க ஆரம்பித்து
சற்றுதொலைவும் சென்றுவிட்டேன்.
இப்போது
நீ கண்டுபிடிப்பதற்குள்
திரும்பிவிடவேண்டும் என்றும் தோன்றுகிறது.
நானெல்லாம் என்ன காதலன்?
*
அழகு
ReplyDelete