இரவின் உறையிலிட்டுச்
சிறு ஈசலும்
என்னை எங்கோ அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக
வேறொரு காலத்தின் கொக்கியில் தொங்கியபடி
இந்த இடத்தின் ஒக்கலில் உட்கார்ந்திருக்கும்
ஒரு தபால் பெட்டி
விளம்பர பொம்மைகளின் முன்
கூனிக்குறுகி நிற்க நேரிடும்
கறுப்புச் சந்தர்ப்பங்களும் கூட...
*
Comments
Post a Comment