வீடுகளின் வீடு
Hilma af Klint |
பலவிதமான வீடுகள் உள்ளன
ஒளியின் தாடை விளிம்பில் தயங்கி நிற்கும்
துளியினைப் போல சில வீடுகள் தலைகீழாய்த் தொங்குகின்றன
மரணத்திலிருந்து உறங்கும் வீடுகள் உண்டு
அவை ஒவ்வொரு நொடியும்
இறந்தவர்களால் வெள்ளையடிக்கப்படுகின்றன
தரைக்கு மேல் ஒரு கணம் கூட நிற்கவியலாது
தான் யார்
தான் எங்கிருக்கிறோம் என
வினவும் வீடுகள் உண்டு
எல்லாப் பதிலையும்
தூக்கி வீசிவிடும் ஒரு கேள்வியைப் போல அவை
தங்களைத் தாங்களே எழுப்பி
தங்களைத் தாங்களே இடித்துக்கொள்ளும் வடிவற்ற வீடுகளை
நோக்கிச் செல்கின்றன
இதில் எது என்னுடயது
எது என்னுடயது இல்லை?
*
Comments
Post a Comment