ஹோட்டல் உணவுமேஜையின் பிரார்த்தனை

Artist: Andrew Wyeth 


சாப்பாட்டுத் தட்டுகளும் குவளைகளும்

இன்றும் என் கிளைகளில்

பறவைகளாக அமரட்டும்

அதன் பாடல்களைச் செவியுற்று

யாரோவொருவர்

தாங்கமுடியாத நம்பிக்கையுடன்

எனை நோக்கி மிதந்து வந்து

இனிப்பின் மின்னல்கள் கசப்பின் மரங்களை

வெளிச்சமூட்டும் திருவிழாவை காணட்டும்

நான் பசியின் ரயில்வே நிலையம்

விபத்துக்குப் பிறகும்

தண்டவாளங்களின் சீனிச்சொப்பனங்கள்

முடிவற்று நீள்வதாக.

வாருங்கள் பயணிகளே வாருங்கள்

இது உங்களது அரியணை

வாருங்கள் பயணிகளே வாருங்கள்

இது சுவையின் ஏவுதளம்.

*

Comments