|
Artist: Giorgio de Chirico |
கோடைக்காலத்தின் கடைசி மாலைப்பொழுது
மேகமூட்டமாகவும் வெதுவெதுப்பாகவும்
நீங்கள் சந்திக்க முயன்ற
யாரும் வீட்டில் இல்லை
உங்களது பையில்
பயன்படுத்தப்படாத இரண்டு
வைன் போத்தல்கள்
தெருவில் நீங்கள் எதிர்கொள்ளும்
அனைவரும்
குடித்திருக்கிறார்கள்
தெருவில்
எல்லோருமே
குடித்திருக்கிறார்கள்
*
Comments
Post a Comment