ஏப்ரல் 25, 2023

 


மருத்துவமனையிலிருந்து

வீடு திரும்பும்வழியில்

ஒருகணம்

விண்மீன்கள் புடைசூழ பிறைமதி திகழும்

கன்னங்கரிய விண்ணுலகத்தை நோக்கினேன்

இத்துணை வருடங்களில் முதன்முறையாக

ஆழத்தில் எவ்வுணர்ச்சியும் ஏற்படவில்லை

என் இறைவா

தயவுசெய்து என்னைக்  காப்பாற்று

வழிதவறி இங்கு வந்துவிட்டேன்

நிஜ உலகத்தைச் சென்றடைவதற்கு

எந்த வழியில் நான் செல்லவேண்டும்?


Comments