வெர்மீயர் - விஸ்லவா சிம்போர்ஸ்கா

Artist- Vermeer

ரிஜ்க்ஸ் மியூசியத்தினின்று அந்தப் பெண்மணி

ஓவிய அமைதியிலும் ஏகசிந்தையிலுமிருந்தபடி 

தினந்தோறும் குடத்திலிருந்து கிண்ணத்திற்குப் 

பாலினை ஊற்றிக்கொண்டிருக்கும் வரையில்

உலகத்திற்கு அழிவு என்று ஏதுமில்லை.

*

Comments