இந்தக் காலையில் - மேரி ஆலிவர்

Artist: Wassily Kandinsky

இந்தக் காலையில்

செங்குருவிகளின் முட்டைகள் பொரிந்துவிட்டன 

மேலும் ஏலவே குஞ்சுகள் உணவுக்காகக் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன

அவர்களுக்குத் தெரியாது உணவு எங்கிருந்து வருகிறது

வெறுமனே கத்திக்கொண்டிருக்கிறார்கள் “மேலும்! மேலும்!” என்று.

வேறு எது குறித்தும் கவலை ஏதுமில்லை 

அவர்களின் விழிகளோ இன்னும் திறந்திருக்கவேயில்லை

காத்திருக்கும் ஆகாசத்தைப் பற்றியோ

ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மரங்களைக் குறித்தோ

ஒன்றும் தெரியாது.

ஏன் தங்களுக்கு இறக்கைகள் இருப்பது கூட  தெரியாது.

ஒன்றுமில்லை என்பது போலவும் 

சாதாரணமான பக்கத்து நிகழ்வு போலவும்

நிகழ்ந்து கொண்டிருக்கிறது ஓர் அற்புதம்.

*

Comments