எழுதுதல்

Artist: Esa Riippa

"நான் ஒரு கவிதை கூட எழுதவில்லை சில மாதங்களாக."

எனது ஞாபகங்களில் ஆங்காங்கு அடிக்கோடிட்டு

காரணமேயிலாது 

காலம்கூட்டிப் படித்துப்பார்த்தேன் ஓய்வில்.

நிறைய நடந்தேன் 

தொலைவின் பசியுடன் 

காணும் ஒவ்வொன்றிலும்

கவிதையின் நடமாட்டமுள்ளதா என்றறிய.

இடையில் 

ஜூராஸிக் பார்க்கில் கண்டேன்

பற்கள் விரிய 

டைனோசர்கள் மானுடர்களைத் துரத்துவதையும்

பின்பு சாகசங்களின் கூண்டினுள் அவை

சிறையெடுக்கப்படுவதையும்.

எத்தனை ஏக்கம் சோப்பினின் இசையில் 

நிலவை மூடும் முகில்களைப் பார்த்து.

ஆ! எவ்வளவு விரும்பியிருப்பேன்

மூன்று பக்கம் அழகினாலும்

இரண்டு பக்கம் உண்மையினாலும் சூழப்பட்ட

அந்த சாம்ராஜ்யம்தனில்

சிறைக்கைதியாய் காலங்கடத்த...

பலபொழுதுகளில் நண்பர்கள் போலவே 

அமர்ந்திருந்தோம் எழுதப்படாத காகிதமும் நானும்

இருவருக்கும் பிரியமுண்டு மகிமையிலும் இனிய சந்தேகத்திலும்

அதன் பொருட்டு உழைத்தோம் அவரவர் உலகில்

முதலாளியின்றி அலுவலகமின்றி

ஆயினும் எப்போதும் 

அன்புடன் 

தவறவிட்டோம் முக்கியமானவொன்றை

இடியின் தாலாட்டில் புரண்டபடியிருந்தேன் ஒருநாள். 

சம்மந்தமேயிலாமல் 

அன்று எனக்குத் தோன்றியது: 

மொத்த பூமியும் ஒரு எழுதப்படாதக் கவிதை என்று.

*

(போலந்து கவிஞர் ஆடம் ஜகாஜெவ்ஸ்கிக்கு



Comments

Post a Comment