அது தான் வழி - வில்லியம் ஸ்டாஃபோர்ட்
Artist: Giorgio de Chirico |
நீங்கள் பின்தொடரும் நூலிழையொன்று இருக்கிறது.
அது செல்கிறது மாறக்கூடிய விஷயங்களினூடாக.
ஆனால் அந்நூலிழை மாறுவதில்லை.
ஆட்கள் வியக்கிறார்கள் நீங்கள் எதைப் பின்தொடர்ந்து செல்கிறீர்கள் என்று.
நீங்கள் விளக்கமளிக்க வேண்டியிருக்கிறது அந்நூலிழையைக் குறித்து.
ஆனால் மற்றவர்களால் அதைக் காண்பது கடினம்.
அதைப் பற்றியிருக்கும் வரையில்
நீங்கள் தொலைந்து போகமாட்டீர்கள்.
பேரிடர்கள் சம்பவிக்கின்றன;
ஆட்கள் காயப்படுகிறார்கள் அல்லது மரிக்கிறார்கள்;
மேலும் நீங்களும் கஷ்டப்படுகிறீர்கள், முதுமை அடைகிறீர்கள்.
நீங்கள் செய்யும் எதனாலும் காலத்தின் போக்கைத் தடுக்க இயலாது.
ஆகவே ஒருபோதும் விட்டுவிடாதீர்கள் அந்நூலிழையை.
*
அரியாட்னேவின் நூலிழையை போல்....
ReplyDelete🦋💙
ReplyDelete