ஒலிக்கவில்லை என்றாலும் - ராபர்ட்டோ யூவாரோஸ்
Artist:Sean hudson |
ஒலிக்கவில்லை என்றாலும்
காற்றினால் நிரம்பியுள்ளது மணி.
அசைவின்றி இருக்கிறது என்றாலும்
பறத்தலால் நிரம்பியிருக்கிறது பறவை.
தனித்திருக்கிறது என்றாலும்
மேகங்களால் நிரம்பியுள்ளது ஆகாசம்.
யாரும் பேசவில்லை என்றாலும்
குரலால் நிரம்பியிருக்கிறது வார்த்தை.
பாதையே இல்லை என்றாலும்
ஒவ்வொன்றும் பாய்ந்து செல்வதால் நிரம்பியிருக்கிறது.
ஒவ்வொன்றும் விரைந்தோடியபடி இருக்கிறது அதனுடைய இருப்பை நோக்கி.
❤️
ReplyDelete