(தூக்கத்தில் இக்கவிதையைக் கனவாகக் கண்டேன்)
நான் முன்னொரு காலத்தில்
நேசித்த ஒருவர்
இருளால் நிரம்பிய ஒரு பெட்டியை
எனக்கு அளித்தார்.
இதுவும் ஓர் அன்பளிப்புதான் என்று உணர்ந்துகொள்ள
எனக்குப் பல வருடங்கள் பிடித்தன.
**
Comments
Post a Comment