நீ பார்க்கும் ஒவ்வொன்றும் - ஜலாலுத்தின் ரூமி
Artist:Quint Buchholz |
நீ பார்க்கும் ஒவ்வொன்றும் காணப்படாத உலகத்தினுள் அதன் வேர்களைக் கொண்டுள்ளது.
வடிவங்கள் மாறலாம், ஆனால் சாராம்சம் அப்படியே இருக்கும்.
ஒவ்வொரு அற்புதக் காட்சியும் மறைந்துவிடும்,
ஒவ்வொரு தித்திப்பான வார்த்தையும் மங்கிவிடும்,
ஆனால் சோர்வடையாதே அதற்காக,
அவை தோன்றி வருகிற விதை நிரந்தரமானது,
வளர்ந்து, கிளைத்து,
புதிய வாழ்க்கையையும் புதிய சந்தோஷத்தையும் தந்துவிடும் அது.
பிறகேன் அழுகிறாய்?
விதை உனக்குள் உள்ளது,
இவ்வுலகம் மொத்தமும் அதிலிருந்தே தோன்றியது.
*
Comments
Post a Comment