யாராவது இருக்கிறீர்களா?
எதையோ சொல்ல இயலாமல்
ஊளையிட்டுக்கொண்டிருக்கிறது காற்று
வேறு உலகத்திலிருந்து
வருகின்றனவா இந்த அலைகள்
பார்த்துக்கொண்டிருக்கும்
நான் கூட
ஏறக்குறைய இல்லை
மத்தியான வானத்திற்கு வைக்கப்பட்ட
காற்புள்ளி என
பட்ட மரத்தின் உச்சிக்கிளையிலிருந்தபடி
ஒரு காகம் கரைந்து கொண்டிருக்கிறது:
யாராவது இருக்கிறீர்களா
யாரா..வது இருக்கிறீர்களா
யா..ரா...வது இருக்கிறீர்களா?
*
Comments
Post a Comment