ஞாபகப்பூர்வமாக
Artist: Keith Jacobshagen |
டிசம்பர் முடிந்துவிட்டது
என் வாழ்வின் மீது படிந்த தூசியைத் துடைத்துக்கொள்கிறேன்
பிறகு கதவைத் திறந்து
வெளியே வந்து
ஏதோ முதல்முறையாக வானத்தைப் பார்ப்பது போல
அண்ணாந்து பார்க்கிறேன்
நான்
மேகமாக இருந்தால்
எப்படி இருப்பேனோ
அப்படியொன்று வானில்
அவ்வளவு தொலைவு
ஆதலால் ஒரு வெண்ணிற வேதனை
தென்மூலையில்
மற்றவை யாவும்
திரண்டு
மழைப்பொழிவுக்கு என
மந்தாரமிட்டுக் கொண்டிருக்க
நான் மட்டும்
கரைந்தபடியே
மெல்ல நகர்ந்து கொண்டிருந்தேன்
எங்கே?
எதற்காக?
நீண்டநாளுக்குப் பின்பு
வெளிச்சம் என்னை ஊடுருவிக் கடக்கிறது
*
நவீன கவிதையின் முதல் படி இதுதான். கவிதையின்பாஷை கரைந்து , அநுபவம் முன் நிற்கிறது. ஒரு கவிதை தரும் அனுபவம் இங்கிருந்துதான் தொடங்குகிறது.
ReplyDeleteநன்று...
ReplyDelete