சொற்பிறப்பியல் - பில்லி காலின்ஸ்
Artist: Brassai |
அவர்கள் பாஸ்க் மொழியை அநாதை மொழி என்கிறார்கள்.
மொழியியலாளர்களுக்குத் தெரியவில்லை
பிற மொழிகளில் எவை
அதைப் பெற்றெடுத்தன என்று.
அநாதை இல்லத்தின் மேல்ச்சாளரத்திலிருந்து
பாஸ்க் மொழி பார்க்கிறது
ஆங்கில மொழி தன் பெற்றோர்களான
லத்தீன் மற்றும் ஆங்கிலோ சாக்ஸனின் சமாதியைப் பார்வையிட
தனியே கல்லறைத்தோட்டத்துக்கு
நடந்து கொண்டிருப்பதை.
*
பாஸ்க் (Basque)- வடக்கு ஸ்பெயினிலும் தென்மேற்கு பிரான்ஸிலும் புழக்கத்திலிருக்கும் மொழி. எந்த மொழிக்குடும்பத்திலிருந்து தோன்றியிருக்கக்கூடும் என இன்னும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
Comments
Post a Comment