மாயக்கதவு
Artist: Suzanne Moxhay |
விழித்தல், புண்களை வருடுதல், உறங்குதல்
அலுத்துவிட்டது அவனுக்கு
தூக்கத்தில் விரிசல் விழுந்து
சொட்டுகின்றன சொற்கள்:
போதும்.. போதும்...
பின்னிரவில்
மிக மிக ஆழத்திலிருக்கும்
ஒரு காயத்தைத் தொடுகிறான்
அது ஒரு சுவிட்ச்
அதுவும் அழைப்பு மணிக்கான சுவிட்ச்
சட்டென்று கண் எதிரில் திறக்கிறது ஒரு மாயக்கதவு
தன் விடுதலையைக் கைவிளக்காக ஏந்தியபடி
அந்தக் கதவினூடாகச் செல்கிறான்
முதலில் அங்கே அவனை அவனுக்குள் கூட்டிச் செல்லும்
படிக்கட்டுகளைக் காண்பான்
பின் அதனூடே பையப் பைய
இறங்கிச் செல்வான்
கடைசியில் கண்டுபிடிப்பான்
'நான் சரியாகிவிட்டேன்' என்ற வார்த்தையையும்
நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் அவனையும்
*
வலியில் திறக்கும் புனைவு.அருமை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete