ஓர் இலையுதிர் காலத்து காலை - டோபிரிசா செசாரிக்
Artist: Gurbuz Dogan Eksioglu |
நான் உடையணிந்து கொண்டேன்.
பின்பு சன்னலை நோக்கிச் சென்றேன்.
வெளியே: இலையுதிர் காலம்.
என் நண்பன் உள்ளே வந்தான். அவனுடைய மேலங்கியோ நனைந்திருந்தது.
என் மொத்த அறையையும் மழையின் வாடை அடிக்கும்படிச் செய்திருந்தான்.
ஒரு "வணக்கம்" கூட சொல்லவில்லை.
உட்கார்ந்தான்.
பிறகு யோசனையில் ஆழ்ந்தவாறு
அவன் சொன்னான்: "இலையுதிர் காலம்"
அந்த வார்த்தையோ அவ்வளவு புதியதாக இருந்தது
மழைக்குப் பிறகான
கிளையிலிருக்கும் ஆரஞ்சு போல.
*
நன்றி: Dobrisa Cesaric Poems
Comments
Post a Comment